Mittai Mittai- song lyrics| Anel Meley Pani Thuli| Vetri Maaran | Santhosh Narayanan | R Kaiser Anand
பெண் : போதை கண்ணாலே
பார்த்த நொடி உலகம் உடைக்காதே
பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள்
என்னை கட்டி இதயம் இழுக்காதே
ஆண் : மிட்டாய் மிட்டாய் தென்றல்
மின்னல் அனுப்பும் மேகம்
சொட்டாய் சொட்டாய் வானம்
தன்னை இழுக்கும் நேரம்
ஆண் : அவள் வந்தாளே
அனல் தந்தாளே
கணம் நினைத்தாலே
உயிர் நிறைத்தாளே
ஆண் : அடியோ மயிலானேனே
மழையோ அது நான் தானே
ஆண் : போதை கண்ணாலே
பார்த்த நொடி உலகம் உடைக்காதே
பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள்
என்னை கட்டி இதயம் இழுக்காதே
ஆண் : எங்கோ இருந்தேனே
தேடி வந்து இம்சை கொடுக்காதே
பேரழகின் தேனில் விழுந்தேனே
உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே
ஆண் : உன்னை நினைத்தால்
என்னை சுற்றி சாளரங்கள்
எந்தன் அறைக்குள் ஓடைக்குருவி
ஐந்து புலனும் வாலறுந்த வானரங்கள்
கோப்பை நுரைக்குள் கோடி அருவி
ஆண் : அதிகாலை கனவொன்றிலே
உனக்காக உலகாக நானே
இருவர் : போதை கண்ணாலே
பார்த்த நொடி உலகம் உடைக்காதே
பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள்
என்னை கட்டி இதயம் இழுக்காதே
இருவர் : எங்கோ இருந்தேனே
தேடி வந்து இம்சை கொடுக்காதே
பேரழகின் தேனில் விழுந்தேனே
உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே
பெண் : பாதை மணல் மேல்
ஆண் : தூரம் சுவைத்து
பெண் : காதல் கொண்ட தாவரங்கள்
தள்ளி இருந்தே
ஆண் : அன்பு வளர்ந்து
பெண் : பூக்கள் தெளிக்கும்
ஆண் : பாடி திளைக்கும்
பெண் : வானம் ரசிக்கும்
பெண் கிளியைப் பார்த்திருந்தால்
எந்தன் மனமோ உன்னை நினைக்கும்
பெண் : துணையாக வரவில்லையே
இணையாக இயல்பாக நீயே
இருவர் : போதை கண்ணாலே
பார்த்த நொடி உலகம் உடைக்காதே
பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள்
என்னை கட்டி இதயம் இழுக்காதே
இருவர் : எங்கோ இருந்தேனே
தேடி வந்து இம்சை கொடுக்காதே
பேரழகின் தேனில் விழுந்தேனே
உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே
Comments
Post a Comment